தொடர் கனமழை.. ரயில் தடம் புரண்டு நிலச்சரிவில் சிக்கியதால் பயணிகள் தவிப்பு..
தொடர் கனமழை.. ரயில் தடம் புரண்டு நிலச்சரிவில் சிக்கியதால் பயணிகள் தவிப்பு..
வடமாநிலங்களில் இதுவரை இல்லாத அளவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ரயில் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மேலும் நிலச்சரிவு ஏற்பட்டதால் இயக்கப்பட்ட குறைவான ரயில்கள் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
மங்களூரு சந்திப்பில் இருந்து சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் செல்லும் அபாசெஞ்சர் ரயில் தென் கோவாவில் துத்ஸாகர் மற்றும் சோனாலிம் இடையே தடம் புரண்டது. அந்த பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாமக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் காயம் அல்லது இறப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தென்மேற்கு ரயில்வே ஒரு தெரிவித்துள்ளது.
ரயில் எண். 01134 மங்களூரு ஜே.என் - சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையத்திற்கு, மகாராஷ்டிராவில் சிப்லூன் மற்றும் காமத்தே இடையே வஷிஷ்டி நதி நிரம்பி வழிந்ததால் மட்கான் லோண்டா மிராஜ் வழியாக திருப்பப்பட்டது. துத்ஸாகர் மற்றும் சோனலிம் பிரிவுக்கு இடையே தடம் புரண்டது. இந்த ரயில் மீண்டும் தெற்கு கோவாவில் உள்ள குலேமுக்கு மற்றொரு ரயில் மூலம் இழுக்கப்பட்டது. அதேபோல் அப்பகுதியில் நிலச்சரிவும் ஏற்பட்டதால் பெரும் அச்சசம் உண்டானது.
மற்றொரு ரயில், ஹஸ்ரத் நிஜாமுதீன்-வாஸ்கோ டா காமா எக்ஸ்பிரஸ், நிலச்சரிவு காரணமாக காரன்சோல் மற்றும் துத்ஸாகர் இடையேயான தடங்களில் நிறுத்தப்பட்டது. இந்த ரயில் மீண்டும் கர்நாடகாவில் உள்ள கேஸில் ராக் நிலையத்திற்கு இழுக்கப்பட்டு வந்தது.
தடம்புரண்ட ரயில் எண் 01134 (மங்களூரு சந்திப்பு முதல் சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையம் வரை) மற்றும் ரயில் எண் 02780 (ஹஸ்ரத் நிஜாமுதீன்- வாஸ்கோ டா காமா எக்ஸ்பிரஸ்) 887 பயணிகள் இருந்தனர். அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தென்மேற்கு ரயில்வே ஒரு தெரிவித்துள்ளது.
#SWRUpdate
— South Western Railway (@SWRRLY) July 23, 2021
Bulletin 1 dated 23.7.2021 pic.twitter.com/2bLPRHY9lS
ரயில் சேவைகளை விரைவாக மீட்டெடுப்பதற்காக பயிற்சி பெற்ற தொழில்நுட்பக் குழுவினருடன் சேர்ந்து நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு மீட்பு குழுவினர் விரைந்தனர். காஸில் ராக் மற்றும் வாஸ்கோடகாமாவிலிருந்து விபத்து நிவாரண ரயில்கள் உடனடியாக அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது. முன்னதாக ஜே.சி.பி. மற்றும் ராட்சத இயந்திரங்கள் உதவியுடன் அங்கு மீட்பு பணி நடைபெற்றது.
Some glimpses of restoration in progress. Our team is working continuously in incessant rain to clear the mud, debris and restore the track. pic.twitter.com/mXJ61B8m65
— South Western Railway (@SWRRLY) July 23, 2021
ரயில் எண் 02780 மற்றும் ரயில் எண் 01134 பயணிகளுக்கு தேவையான உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. டீ, தின்பண்டங்கள், குடிநீர் ஆகியவை மீட்பு குழுவினர் மூலம் பயணிகள் மீட்கப்பட்டு தங்கவைக்கப்பட்டிருந்த காஸில் ராக் நிலையம் மற்றும் குலேம் நிலையத்தில் வைத்து வழங்கப்பட்டது.
Incessant rains don't make the task easy, but, we SHALL overcome. Continuous rain has pushed muck, slush and debris beside & inside the derailed coach.
— South Western Railway (@SWRRLY) July 23, 2021
All safety precautions have been observed for our workmen who are toiling in tough conditions. pic.twitter.com/F7X4lQrlB2
சோனாலியம்- குலெம் மற்றும் துத்ஸாகர்-காரன்சோல் இடையே நிலச்சரிவு ஏற்பட்டதால் மேலும் 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. லோந்தா-வாஸ்கோ டா காமா, எஸ்.எஸ்.எஸ். ஹுப்பல்லி-பெலகாவி மற்றும் பெலகாவி-எஸ்.எஸ்.எஸ். ஹுப்பல்லி இடையே மூன்று ரயில்கள் ரத்து செய்யப்பட்டன என்று தென் மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Breakfast, Lunch, Drinking water arranged to passengers. pic.twitter.com/sjehy92qaY
— South Western Railway (@SWRRLY) July 23, 2021
newstm.in