தொடர்ந்து ஏறும் தங்கம் விலை!! இன்றைய விலை எவ்வளவு தெரியுமா?

தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறிக் கொண்டே செல்வதால் பெண்கள் கலக்கத்தில் உள்ளனர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கல்யாண கனவுகளோடு காத்திருந்தவர்களுக்கு தங்கத்தின் தொடர் விலை ஏற்றம் அதிர்ச்சியையே கொடுத்து வருகிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸும் தங்கத்தின் தொடர் விலையேற்றத்திற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.

Update: 2020-03-04 15:43 GMT

பங்கு சந்தை நிலவரமும் மந்த கதியில் செல்வதால், முதலீட்டாளர்கள், பாதுகாப்பான முதலீடு என்று தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்து வருவதும் தங்கத்தின் விலையேற்றத்திற்கு காரணமாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் இன்று காலை நிலவரப்படி (4-3-2020) தங்கத்தின் விலை: 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்: 1 கிராம் தங்கம் ரூ.4,014 என்றும், 8 கிராம் தங்கம் ரூ.32,112 என்றும், 10 கிராம் தங்கம் ரூ.40,140 என்றும், 100 கிராம் தங்கம் ரூ.4,01,400 என்றும் விற்கப்படுகிறது.

அதே சமயம் 1 கிராம் வெள்ளி ரூ.48.70 க்கு விற்கப்படுகிறது.

newstm.in

Tags:    

Similar News