தொடரும் சோகம்.. தொற்று உறுதியான 7 மணி நேரத்தில் இளம் மருத்துவர் உயிரிழப்பு !

தொடரும் சோகம்.. தொற்று உறுதியான 7 மணி நேரத்தில் இளம் மருத்துவர் உயிரிழப்பு !

Update: 2021-05-12 06:15 GMT

கொரோனா வைரஸ் ஓராண்டுக்கும் மேலாக இந்தியாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. கொரோனாவின் பிடியில் சிக்கி நாள்தோறும் ஏராளமான மக்கள் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் வடமாநிலங்களில் சடலங்கள் எரிக்கக்கூட இடம் இல்லாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

மேலும் கடந்த ஆண்டை விட இந்தாண்டு முன்கள பணியாளர்கள் பலரும் கொரோனாவின் பிடியில் சிக்கி வருகின்றனர். அந்த வகையில் கொரோனா பணியில் ஈடுபட்டு வந்த 26 வயதே ஆன இளம் மருத்துவர் கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவரான அனாஸ் முஜாகித், டெல்லி அரசு குரு தேவ் பகதூர் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.

கொரோனா நோயாளிகளிடையே பணியாற்றி வந்ததால், வீட்டில் தங்கியிருக்காமல், தனியார் ஹோட்டலில் தங்கி வந்துள்ளார் அனாஸ். ரம்ஜான் நோன்பு இருந்து வரும் நிலையில், சக மருத்துவ நண்பருடன் தனது வீட்டுக்கு சென்று இப்தார் கொண்டியுள்ளார். மீண்டும் ஹோட்டலுக்கு வரும் வழியில், காய்ச்சல் இருந்ததால், அனாஸுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. அப்போது மயங்கி விழுந்துள்ளார்.

தலை மற்றும் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்ட நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அனாஸுக்கு இரவு 8 மணிக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது. வென்டிலேட்டர் வசதியுடன் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அதிகாலை 3 மணிக்கு அனாஸ் உயிரிழந்துவிட்டார்.

இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் மத்தியில் கலக்கத்தையும் உண்டாக்கியுள்ளது.

Newstm.in

Tags:    

Similar News