பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து.. மன்னிப்பு கேட்கும் அமைச்சர் !!

பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து.. மன்னிப்பு கேட்கும் அமைச்சர் !!

Update: 2021-11-27 20:15 GMT

பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக அமைச்சருக்கு எதிராக பலரும் கண்டனம்  எழுந்துள்ளது. 

மத்திய பிரதேச மாநிலத்த்தில் சேர்ந்த உணவு மற்றும் சிவில் சப்ளை துறை அமைச்சராக பாஜகவைச் சேர்ந்த பிசாஹுலால் சிங் உள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்களின் உரிமைகள் குறித்து கூட்டத்தில் பேசினார். அப்போது, உயர்சாதி மற்றும் செல்வாக்கு மிக்கவர்கள் தங்கள் பெண்களை வீட்டிற்குள் கட்டுப்படுத்தி வைத்துள்ளனர். சமூக - சமத்துவம் வேண்டும் என்றால், இந்த பெண்களை அவர்களின் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். செல்வாக்கு மிக்கவர்கள் தங்களது பெண்கள் சமூக - சமத்துவத்தைப் பெற அனுமதிப்பதில்லை, என்றார்.

இவரது பேச்சுக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதேடுமட்டுமல்லாம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஸ்வநாத் சிங் அஞ்சூமின் மனைவி குறித்தும் அவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார். இது  தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் இவரது கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். 

அதனால், அமைச்சர் பிசாஹுலால் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘யாருடைய உணர்வுகளையும் நான் புண்படுத்தும்படி பேசவில்லை. அவ்வாறு அவர்களது மனம் புண்பட்டால் அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். எந்தவொரு சமூகத்தையும் குறைத்து பேசவில்லை. பெண்கள் சமத்துவத்துடன் சமூக சேவை செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம். ஆனால், எனது வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது, விளக்கம் அளித்துள்ளார்.

newstm.in

Tags:    

Similar News