சர்ச்சை வீடியோ! ஸ்மோக்கிங் ரூமில் ஆண்களுடன் அபிராமி!!

சர்ச்சை வீடியோ! ஸ்மோக்கிங் ரூமில் ஆண்களுடன் அபிராமி!!

Update: 2022-02-01 09:51 GMT

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

முதல் சீசனில் வனிதா, சினேகன், சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், ஜூலி, அபிராமி, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய 14 பேர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிராமி செய்த செயல் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுவரையில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் பல விஷயங்களை எடிட் செய்து ஒரு முக்கியமான செயல்களை மட்டும் காட்டி இருந்தார்கள்.

ஆனால், தற்போது ஒளிபரப்பாகி வரும் அல்டிமேட் நிகழ்ச்சியில் உள்ளே நடப்பதை அப்படியே ரசிகர்கள் பார்த்துக்கொள்ள முடியும். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டுக்குள் புகை பிடிக்கக்கூடிய பழக்கம் இருப்பவர்களுக்கு ஒரு அறை இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இந்நிலையில் புகைப்பிடிக்கும் அறையில் நிரூப், அபிநய், ஷாரிக் மற்றும் அவர்களுக்கு பின்புறமாக கண்ணாடியில் ஒரு பெண் போட்டியாளரும் இருக்கின்றார். அவர்தான் அபிராமி. அவரும் அங்கு நின்று புகைப்பிடிக்கும் காட்சி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


இந்த வீடியோ ஒரு பக்கம் சர்ச்சைகளை கிளப்பினாலும், மற்றொரு பக்கம் இதுல என்ன ஆண், பெண் என அபிராமிக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

Similar News