சர்ச்சை! தேசிய கீதம் இசைக்கும் போது ‘சூயிங் கம்’ சாப்பிட்ட கோலி!!
சர்ச்சை! தேசிய கீதம் இசைக்கும் போது ‘சூயிங் கம்’ சாப்பிட்ட கோலி!!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தேசிய கீதம் இசைக்கும்போது சூயிங் கம் மெல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நேற்று நடந்த தென்னாப்பிரிக்காவுடனான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கேப் டவுனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
தென்னாப்ரிக்கா அணியின் டிகாக் சதம் அடித்தார். அதேபோல் வேண்டர் டசன், மில்லர் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அந்த அணி 287 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 283 ரன்கள் எடுத்து வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்போட்டியில் தவான் 61 ரன்களும், விராட் கோலி 65 ரன்ளும், சிறப்பாக விளையாடிய தீபக் சஹர் 34 பந்துகளில் 54 ரன்களையும் எடுத்தனர்.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது. இந்நிலையில் தற்போது போட்டிக்கு முன் ஒலிக்கப்படும் தேசிய கீதத்தின் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Virat Kohli busy chewing something while National Anthem is playing. Ambassador of the nation.@BCCI pic.twitter.com/FiOA9roEkv
— Vaayumaindan (@bystanderever) January 23, 2022
இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் தேசிய கீதம் பாடிக் கொண்டிருக்க முன்னாள் கேப்டன் விராட் கோலி மட்டும் சூயிங் கம் மெல்லும் காட்சி உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
newstm.in