‘பாலியல் வன்கொடுமையை என்ஜாய் பன்னுங்க’- காங்கிரஸ் எம்.எல்.ஏ பேச்சால் சர்ச்சை

‘பாலியல் வன்கொடுமையை என்ஜாய் பன்னுங்க’- காங்கிரஸ் எம்.எல்.ஏ பேச்சால் சர்ச்சை

Update: 2021-12-18 07:56 GMT

பாலியல் வன்கொடுமையை தடுக்க முடியாவிட்டல் அதை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ கர்நாடக சட்டசபையில் பேசியிருப்பது பெரும் சரச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநில சட்டமன்ற கூட்டத்தில் வேளாண் பயிர்கள் பாதிப்பு மற்றும் இழப்பீடு குறித்த விவாதம் நேற்று (டிச.16) நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர் விமர்சனங்களையும், கோரிக்கைகளையும் முன்வைத்து வந்தது. இது குறித்து விவாதிக்க கேள்வி நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

அப்போது சட்டப்பேரவையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் சபாநாயகருமான ரமேஷ் குமார் பேசினார். அவர், பாலியல் வன்கொடுமையை எதிர்க்கொள்ளும்போது அதை தடுக்க முடியாவிட்டால் அதை மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும் என்கிற பழமொழி ஒன்று உள்ளது. இதே நிலையில்தான் நான் இருக்கிறேன், என்று கூறியுள்ளார். அதாவது பெண்ணை ஒருவர்  பாலியல் வன்கொடுமை செய்யும்போது, அப்பெண்ணால் தடுக்க முடியவில்லையெனில், பாலியல் வன்கொடுமை செய்வதை மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

இதற்கு தற்போதைய சபாநாயகர் காகேரி தனது சிரிப்பின் மூலம் கே.ஆர்.ரமேஷ் குமாருக்கு பதிலளித்தார்.  இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏவின் பேச்சும், பாஜக சபாநயகரின் வரவேற்பும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதற்கு காங்கிரஸ் பெண் எம்எல்ஏக்கள் கண்டனம் தெரிவித்தனர். பல்வேறு அரசியல் கட்சியினரும் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ ரமேஷ் குமார் தனது கருத்துக்கு மன்னிப்பு கோரி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். கற்பழிப்பு குறித்து சட்ட சபையில் நான் பேசிய கருத்து அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். எனது நோக்கம் அதுவல்ல. இனி கவனமுடன் இருப்பேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.
 


newstm.in

Tags:    

Similar News