ரிலீசுக்கு தயாராகும் 'குக் வித் கோமாளி' தர்ஷாவின் புதிய படம் !!

ரிலீசுக்கு தயாராகும் 'குக் வித் கோமாளி' தர்ஷாவின் புதிய படம் !!

Update: 2021-05-13 16:06 GMT

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. இந்த நிகழ்ச்சி உலக அளவில் மிகவும் பிரபலம். இதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஷிவாங்கி, புகழ், பாலா என அந்த நிகழ்ச்சியில் உள்ள கோமாளிகளின் சேட்டைக்காகவே பலரும் விரும்பி பார்க்கும் ஷோவாக குக் வித் கோமாளி உள்ளது.

தமிழில் இந்நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து வேற்று மொழிகளில் இந்நிகழ்ச்சியை தயாரிக்க தொலைக்காட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதில் முதல் முயற்சியாக கன்னடத்தில் குக் வித் கோமாளி தயாராகவுள்ளது. அதற்கு ‘குக் வித் கிறுக்கு’ என்று பெயர் சூட்டியுள்ளனர். 

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குக்களும் சரி கோமாளிகளும் சரி மிகப்பெரிய அளவில் பிரபலமானது மட்டுமன்றி அதில் உள்ள பலருக்கும் திரையுலக வாய்ப்புகளும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சின் மூலம் பிரபலமானவர் புகழ். இவர் தற்போது விஜய் சேதுபதி, அருண் விஜய் ஆகியோரது படங்களில் நடித்து வருகிறார்.  இவர் மட்டுமின்றி குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் ஷிவாங்கி சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடிக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான தர்ஷா குப்தாவும்  திரௌபதி பட இயக்குநரின் ருத்ரதாண்டவம் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். 

 'குக் வித் கோமாளி' தர்ஷா கதாநாயகியாக நடித்து வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இயக்குனர் மோகன் "படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி விட்டதாகவும் தனது பகுதியின் டப்பிங் பணியை தர்ஷா குப்தா முடித்து விட்டதாகவும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். 


நாயகனாக திரெளபதி நாயகன் ரிச்சர்ட் நடிக்கிறார். இந்த படத்தில் முதன்முதலாக ரிச்சர்ட் போலீசாக நடிக்கிறார் என்றும்  திரெளபதி போலவே இந்த படமும் ஒரு உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News