சச்சினை தொடர்ந்து இர்ஃபான் பதானுக்கும் கொரோனா தொற்று! அலறும் மூத்த கிரிக்கெட் வீரர்கள்!
சச்சினை தொடர்ந்து இர்ஃபான் பதானுக்கும் கொரோனா தொற்று! அலறும் மூத்த கிரிக்கெட் வீரர்கள்!
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை தொடர்ந்து, கிரிக்கெட் வீரர் யூசுப் பதானுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் மார்ச் மாதம் தொடக்கம் முதல் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் 50,000-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு பிரபலங்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர், அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், டெண்டுல்கரை தொடர்ந்து யூசுப் பதானுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா அறிகுறிகள் லேசாக இருந்ததால் பரிசோதனை மேற்கொண்டேன். அதில் கொரோனா தொற்று உறுதியானது.
இந்த நிலையில் யூசுப் பதானின் சகோதரர் இர்ஃபான் பதானுக்கும் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சச்சின், யூசுப் பதான், சேவாக், யுவராஜ் சிங் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்ற இந்தியா லெஜண்ட்ஸ் அணி சார்பில் அண்மையில் நடைபெற்ற ரோட் சேஃப்டி கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதனையடுத்தே டெண்டுல்கர், இர்ஃபான் பதான், யூசுப் பதானுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சக வீரர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
Newstm.in