தமிழகத்தில் 9,000ஐ நெருங்கும் ஒரு நாள் கொரோனா!!

தமிழகத்தில் 9,000ஐ நெருங்கும் ஒரு நாள் கொரோனா!!

Update: 2022-01-07 20:40 GMT

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8,944 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. 10 நாட்களுக்கு முன்பு தினசரி பாதிப்பு சொற்பமாக இருந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக தினசரி பாதிப்பு இருமடங்காக அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 8,944 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 30,817ஆக அதிகரித்துள்ளது. 984 பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் நோய் பாதித்த 8 பேர் உயிரிழந்தனர். ஒமைக்ரான் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தமிழகத்தில் 121ஆக உள்ளது. அவர்களில் 117 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் 4531 பேருக்கு ஒரே நாளில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 1039 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 514 பேரும், கோவை மாவட்டத்தில் 408 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 257 பேரும், வேலூர் மாவட்டத்தில் 216 பேரும் ஒரே நாளில் நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

newstm.in

Similar News