தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 19,276 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 19,276 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!

Update: 2022-01-31 23:53 GMT

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 19,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது, இதனால் மொத்த பாதிப்பு 33,45,220 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் மேலும் 2,897 பேருக்கும், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 16,379 பேருக்கு உறுதி செய்யபட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 7,32,387 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவிலிருந்து 25,056 பேர் குணமடைந்தயுள்ளனர், இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 31,09,526 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,98,130 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் 1,22,105 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 6,06,79,827 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 20 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37,564 ஆக உயர்ந்துள்ளது என தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Similar News