“இவர்களையே கொரோனா அதிகம் பாதிக்கிறது” : அமைச்சர் அதிரடி கருத்து!!

“இவர்களையே கொரோனா அதிகம் பாதிக்கிறது” : அமைச்சர் அதிரடி கருத்து!!

Update: 2022-01-17 09:37 GMT

கொரோனா தடுப்பூசி இரண்டு தவணை செலுத்தாதவர்களையே தற்போது ஒமைக்ரான் அதிகம் பாதிப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் மொத்தமாக 1.91 லட்சம் படுக்கைகள் உள்ளது. ஆனால் மருத்துவமனையில் இதுவரை 8,912 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர் என்று கூறினார்.

நந்தம்பாக்கம் சிகிச்சை மையத்தில் 950 படுக்கைகள் பயன்பாட்டில் உள்ளது. இவற்றில் 350 படுக்கைகள் முன்களப்பணியாளர்களான அரசு அலுவலர்கள், காவல் துறையினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

வீட்டு தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்க 1,535 களப்பணியாளர்கள் சென்னை மாநகராட்சி சார்பில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று கூறிய அமைச்சர்,  2 தவணை செலுத்தி கொண்டவர்கள் இறப்பின் நிலைக்கு செல்லவில்லை என்று கூறினார்.

சென்னையில் மட்டும் 37,991 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். குறைவான நபர்களே சிகிச்சை மையத்திற்கு வருகின்றனர். பெரும்பான்மையானோர் வீட்டு தனிமையில் உள்ளனர். தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெரும் அளவில் குழந்தைகள் ஒருவர் கூட இல்லை.

எனவே, தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் இறக்கக்கூடிய சூழல் உள்ளது என்றும் உயிர் காக்கும் ஆயுதமாக செயல்படும் தடுப்பூசியை மக்கள் அனைவரும் தவறாமல் செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் வரும் சனிக்கிழமை 19ஆவது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Similar News