முதலமைச்சருக்கு கொரோனா உறுதி.. அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் !!

முதலமைச்சருக்கு கொரோனா உறுதி.. அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் !!

Update: 2022-01-07 07:00 GMT

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருடன் தொடர்பில் உள்ள அனைவரும் பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியாவில் ஒரே நாளில் 90 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. முந்தையநாளை விட 56.5% கூடுதலான எண்ணிக்கையில் நேற்று பாதிப்பு பதிவாகி இருந்தது. ஓமைக்ரான் எண்ணிக்கையும் கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ராஜஸ்தான் முதலமைச்சர்  அசோக் கெலாட் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், லேசான அறிகுறிகளுடன் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால்  பிரச்சனை இல்லை என்றும், தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்திக்கொண்டு, கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் அசோக் கெலாட் கேட்டுக்கொண்டுள்ளார். 

முன்னதாக, அசோக் கெலாட் மற்றொரு ட்விட்டர் பதிவில், ஒமைக்ரான் வைரஸ் அவ்வளவு அச்சுறுத்தலாக இல்லை என்ற அனுமானத்தில், பொதுமக்கள் பொறுப்பில்லாமல் இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார். கொரோனாவின் பிற வகைகளைப் போலவே ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து மீண்ட பிறகு ஏற்படும் உடல்நல பிரச்சனைகளும் தீவிரமானதாக இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர், என்றும் கெலாட் பகிர்ந்திருந்தார்.

newstm.in
 

Tags:    

Similar News