மாணவர்களை தாக்கும் கொரோனா! ஒரே நாளில் 71 பேருக்கு தொற்று!!

மாணவர்களை தாக்கும் கொரோனா! ஒரே நாளில் 71 பேருக்கு தொற்று!!

Update: 2022-01-05 18:31 GMT

அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று மட்டும் 2,700 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் மாணவர்கள் அதிக அளவில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் 71 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 4 பேர் அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாகத்தில் உள்ள வெளிநாடடு மாணவர்கள் விடுதியில் தங்கி படிப்பவர்கள்.

மீதமுள்ள 67 மாணவர்கள், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் குரோம்பேட்டை எம்ஐடி வளாக விடுதி மாணவர்கள். எம்ஐடி வளாக விடுதியில் வெளி மாவட்டங்கள், மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் என மொத்தம் 1600 மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர்

இவர்களில் சிலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து விடுதி மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்டமாக 1,400 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் 9 பேர் மாணவிகள் உள்ளிட்ட 67 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து எம்ஐடி கல்லூரிக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாகத்தில் ஏற்கெனவே 12 மாணவர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

newstm.in

Similar News