நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா உறுதி.. தொடர்பில் இருந்தோர் பரிசோதனை செய்ய கோரிக்கை..!

நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா உறுதி.. தொடர்பில் இருந்தோர் பரிசோதனை செய்ய கோரிக்கை..!

Update: 2022-01-26 12:29 GMT

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த மத்திய - மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன்படி இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், இந்த வைரஸ் தொற்றால் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் சமீப நாட்களாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


அந்த வகையில், பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இருந்தபோதிலும் நேற்றிரவு லேசான அறிகுறிகளுடன் கோவிட் 19 பாசிட்டிவ் பரிசோதனை செய்து வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறேன்.

கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.


 


 

Similar News