கொரோனா 3ஆவது அலை நாட்டில் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சினிமா மற்றும் விளையாட்டு நட்சத்திரங்களும் பாதிக்கப்படுகின்றனர். இதனை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. பாதிப்புக்களின் அடிப்படையில் கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது.
இருந்தபோதிலும் அரசியல் தலைவர்கள், திரைநட்சத்திரங்கள், மருத்துவர்கள் , காவலர்கள், சாமானியர்கள் என பாரபட்சமின்றி கொரோனா பரவி வருகிறது. தினசரி பாதிப்புக்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கடலூர் மாவட்ட கலெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.