கொரோனா பாதிப்பு.. டாஸ் போட்டபின்னர் ஆஸி.- வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டி நிறுத்தம் !!

கொரோனா பாதிப்பு.. டாஸ் போட்டபின்னர் ஆஸி.- வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டி நிறுத்தம் !!

Update: 2021-07-23 08:49 GMT

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலியா அணியை வெஸ்ட் இண்டீஸ் அணி துவசம் செய்து வருகிறது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் முதலில் நடைபெற்றது. இதில் 4-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. 

முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்ற அபார வெற்றிபெற்றது. இந்நிலையில், 2ஆவது ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற இருந்தது. போட்டி தொடங்குவதற்காக டாஸ் போடப்பட்டது. இதில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங்கை தொடங்க ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தயாகினர். பில்டீங் செய்ய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் களத்திற்கு வர பவுண்ட்ரி லைனில் காத்திருந்தனர்.

ஆனால் போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிர்வாக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டது. இந்த தகவல் விளையாட்டு குழுவினருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, உடனடியாக போட்டி தொடங்குவது நிறுத்தப்பட்டது. மேலும் வீரர்கள் அனைவரும் ஓட்டல் அறைக்க்கு திரும்ப அனுப்பப்பட்டனர். அனைத்து வீரர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இதன் முடிவுகளின் அடிப்படையில் 2ஆவது ஒருநாள் போட்டி எப்போது நடைபெறும் என்பது குறித்த விவரம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
newstm.in

Tags:    

Similar News