கொரோனா அச்சம் - கோழி கிலோ ரூ.38-க்கு விற்பனை

கோழி இறைச்சியில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவுகிறது என்று சமூக வலைத்தளங்களில் சில வீடியோ காட்சிகள் வைரலாக பரவியது. இதனால் கோழி இறைச்சியை பெரும்பாலானோர் தவிர்த்து வருகின்றனர். சென்னையில் நேற்று உயிருடன் கூடிய கோழி விலை கிலோவுக்கு ரூ.38-க்கு விற்பனையானது.

Update: 2020-03-10 02:31 GMT

கோழி இறைச்சியில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவுகிறது என்று சமூக வலைத்தளங்களில் சில வீடியோ காட்சிகள் வைரலாக பரவியது. இதனால் கோழி இறைச்சியை பெரும்பாலானோர் தவிர்த்து வருகின்றனர்.

இதன் காரணமாக கோழி விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.கோழி உற்பத்தி பண்ணைகளில் கோழி விற்பனை ஆகாமல் பெருமளவில் தேக்கம் அடைந்து இருக்கிறது. விற்பனையாளர்களும் கோழியை வாங்குவதற்கு தயக்கம் காட்டுவதால் அதன் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. சென்னையில் நேற்று உயிருடன் கூடிய கோழி விலை கிலோவுக்கு ரூ.38-க்கு விற்பனையானது.

newstm.in

Tags:    

Similar News