ஒரே பள்ளியில் 60 மாணவர்களுக்கு கொரோனா.. பெரும் அதிர்ச்சி !!
ஒரே பள்ளியில் 60 மாணவர்களுக்கு கொரோனா.. பெரும் அதிர்ச்சி !!
ஒரே பள்ளியில் 60 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதையடுத்து, கர்நாடகா மாநிலத்தில் சில வாரங்களுக்கு முன்பு 6ஆம் வகுப்பு முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. நீண்டகாலத்துக்கு பிறகு பள்ளிக்கு மாணவர்கள் உற்சாகமாக சென்றனர்.
பெங்களூருவில் உள்ள சைதன்யா உண்டு உறைவிட பள்ளியில் சுமார் 500 மாணவர்கள் அங்கேயே தங்கி படித்து வருகின்றனர். இதில் பள்ளி மாணவர் ஒருவருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
பின்னர் அந்த மாணவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது, அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து மாணவர்களின் பாதுகாப்பு கருதி, அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. முடிவில் 60 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு மாணவர்களுக்கு அறிகுறிகள் இருந்துள்ளன.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு சூழலை கருத்தில் கொண்டு அக்டோபர் 20ஆம் தேதி வரை பள்ளி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிகுறிகளுடன் கூடிய மாணவர்கள் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அறிகுறிகள் இல்லாத மாணவர்கள் பள்ளி வளாகத்தில் தனியாக தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களில் 14 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
newstm.in