தமிழகத்தில் மேலும் 719 பேருக்கு கொரோனா.. தப்பித்த 29 மாவட்டங்கள்.. இன்றைய பாதிப்பின் முழு விவரம் !

தமிழகத்தில் மேலும் 719 பேருக்கு கொரோனா.. தப்பித்த 29 மாவட்டங்கள்.. இன்றைய பாதிப்பின் முழு விவரம் !

Update: 2021-12-06 20:15 GMT

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 27,31,235 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு, குணமடைந்தோர் விவரங்கள் குறித்து சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று தமிழகத்தில் மேலும் 719 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 27,31,235ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 737 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 26,86,683 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 36,529 ஆக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் 03 பேரும், அரசு மருத்துவமனையில் 07 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 5,48,85,228 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,01,255 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 8,013 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சென்னையில் இன்று ஒரே நாளில் 128 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 558757 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 29 மாவட்டங்களில் புதிதாக யாரும் கொரோனாவால் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

Similar News