கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமாருக்கு கொரோனா !!
கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமாருக்கு கொரோனா !!
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் புது உச்சத்தை தொட்டு வருகிறது. ஒருநாளுக்கு சுமார் 4 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து வருகின்றனர். இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு தடுப்பு முறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமாருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று காரணமாக தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தங்கள் இல்லத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருவரும் குவாரண்டைன் செய்து கொண்டுள்ளனர். புவனேஷ்வர் குமார் தாயாருக்கு கொரோனா பாசிட்டிவ் என்பதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடருந்து இருவருக்கும் வைரஸ் அறிகுறிகள் உருவானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.கடந்த மாதம் புவனேஷ்வரின் தந்தை கிரண் பால் சிங் கல்லீரல் புற்றுநோயால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.