இந்தியாவின் நைட்டிங்கேலுக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!
இந்தியாவின் நைட்டிங்கேலுக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!
இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ள நிலையில் திரையுலகம், அரசியல், விளையாட்டுத் துறைகளைச் சேர்ந்த பிரபலங்களுக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
அந்த வகையில், ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என அழைக்கப்படும் பழம்பெரும் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவர், மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
லதா மங்கேஷ்கருக்கு லேசான அறிகுறிகள் உள்ளதாக அவரது மருமகள் ரச்சனா உறுதிப்படுத்தி உள்ளார்.