சுகாதாரத்துறை அமைச்சருக்கு 2வது முறையாக கொரோனா..!
சுகாதாரத்துறை அமைச்சருக்கு 2வது முறையாக கொரோனா..!
ஜார்க்கண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பன்ன குப்தாவுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பன்ன குப்தாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், மீண்டும் அவருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் பன்ன குப்தா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: “எனக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக எனக்கு உடல் நலம் சரியில்லை. சமீப நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.