பிரபல நடிகைக்கு கொரோனா !!

பிரபல நடிகைக்கு கொரோனா !!

Update: 2021-05-11 10:11 GMT

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. சாமானியன் முதல் சாதனையாளர் வரை எந்தவித பாகுபாடுமின்றி கொரோனா தாக்கி வருகிறது. பல்வேறு திரையுலக பிரபலங்களும் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை சுனைனாவும் இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர், தமிழில் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்தவர்.

இதுகுறித்து சுனைனா தனது ட்விட்டரில் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

“பலத்த எச்சரிக்கையுடன் இருந்தும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி வீட்டின் என்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். என் குடும்பத்தினர் தவிர வேறு யாருடன் தொடர்பு கொள்ள வில்லை என்பதால் அவர்களும் தனிமையில் உள்ளனர். அனைவரும் முகக்கவசம் அணியுங்கள், வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். உயிரை காப்பாற்றுங்கள். அனைவருக்கும் என் பிரார்த்தனை” எனக் குறிப்பிட்டுள்ளார்.


 

Tags:    

Similar News