கொரோனா - நீங்கள் வாழும் ஊருக்கு , நன்மை செய்யுங்கள் - பிரதமர் மோடி டிவிட்

கொரோனா - நீங்கள் வாழும் ஊருக்கு , நன்மை செய்யுங்கள் - பிரதமர் மோடி டிவிட்

Update: 2020-03-21 16:37 GMT

சீனாவில் தொடங்கிய கொரோனா தற்போது உலகம் முழுவதும் தீவிரமாக உள்ள நிலையில், மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒரு அங்கமாக நாளை மக்கள் அனைவரையும் தன்னெழுச்சியாக ஊரடங்கை கடைபிடிக்க வேண்டுகோள் விடுத்திருந்தது.

இந்நிலையில், பிரதமர் மோடி தற்போது வெளியிட்ட டிவிட்டர் பதிவில் , தேவையில்லாத பயணங்களை மேற்கொள்வதை தவிர்த்து, உங்களுக்கு மட்டும் இல்லாமல் அடுத்தவர்களுக்கு நன்மை செய்யுங்கள். மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனைகளை கேட்டு நடங்கள்.” மேலும் , “முன்னெச்சரிக்கை என்பது பயப்படுத்துவதற்கல்ல. தேவையில்லாத பயணங்களை தவிர்ப்பதன் மூலம், உங்கள் வீட்டிற்கு மட்டுமல்லாமல் நீங்கள் வாழும் ஊருக்கும் நன்மை செய்யுங்கள்.” என்றார்.

சார்க் அமைப்பின் கொரோனா வைரஸ் அவசரகால நிதியத்திற்கு 2,00,000 அமெரிக்க டாலர் தொகையை வழங்கியதற்கு மாலத்தீவு அதிபருக்கு மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

Newstm.in

Tags:    

Similar News