இந்தியாவில் கொரோனா இன்னும் உச்சம் அடையவில்லை... நிபுணர் குழு எச்சரிக்கை !
இந்தியாவில் கொரோனா இன்னும் உச்சம் அடையவில்லை... நிபுணர் குழு எச்சரிக்கை !
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அடுத்த வாரத்தில் உச்சம் அடையலாம் என நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2ஆவது அலை மிகவும் வீரியத்துடன் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிகப்பு அதிகரித்து வருவதோடு உயிரிழப்பும் தினந்தோறும் புதிய உச்சங்களை பல மாநிலங்கள் சந்தித்து வருகின்றன. குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் வரை கட்டுக்குள் இருந்துவந்த கொரோனா பரவல் பிப்ரவரி மாதத்தின் பாதியில் இருந்தே அதிகரிக்கத் தொடங்கியது.
அதன்பின்னரும் தினமும் ஒரு லட்சம், இரண்டு லட்சம் என அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த 9 நாட்களாக தினந்தோறும் 3 லட்சம் என்ற அளவைக் கடந்துவிட்டது. 5 மாநில தேர்தல்களே கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க காரணம் என பலரும் குற்றச்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட தரவுகளின் படி ஒரு நாள் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் மட்டும் 3.86 லட்சமாக உள்ளது. இதன் காரணமாக உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய ஆக்ஸிஜன், மருந்து பொருட்கள் மற்றும் பிற மருத்துவ உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து மத்திய அரசு உதவியாகவும், கொள்முதல் வகையில் பெற்று வருகிறது.
இந்த நிலையில், கொரோனா 2ஆவது அலை குறித்து மத்திய அரசு நியமித்துள்ள நிபுணர் குழு ஒன்றின் தலைவர் வித்யாசாகர் கூறுகையில், எங்கள் நம்பிக்கை என்னவென்றால், அடுத்த வாரத்திற்குள் நாடு முழுவதும் தினசரி புதிய பாதிப்புகள் உச்சம் அடையலாம். கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி மத்திய அரசுக்கு இக்குழு அளித்த ஒரு அறிக்கையில், மே 5 முதல் 10ஆம் தேதிக்குள் இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சம் அடையலாம் என தகவல் தந்தனர்.
இந்தியாவில் கொரோனாவின் முதல் அலை கடந்த ஆண்டு செப்டம்பர் மத்தியில் உச்சம் அடைந்தது அப்போது அதிகபட்சமாக ஒரு நாளில் 97,894 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஆனால் இப்போது அதை போல 3 மடங்கு பாதிப்பை இந்தியா சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
newstm.in