இந்தியாவால் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா பாதிப்பு.. WHO !!
இந்தியாவால் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா பாதிப்பு.. WHO !!
இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால், தென்கிழக்கு ஆசிய நாடுகளில தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலையில் பல நாடுகளில் கொரோனா உச்சத்தில் இருந்தது. இதில் இந்தியாவும் ஒன்று. ஆனால் அதன்பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில் இதனையொட்டி, உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில் புதிய தகவல்களை தெரிவித்துள்ளது.
அதில், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கடந்த வாரம் சுமாா் 7,99,000 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது, முந்தைய வாரத்தைவிட 5 சதவீதம் குறைவாகும்.
அந்தப் பிராந்தியத்தில் இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில், கடந்த வாரம் இலங்கையில் 26 சதவீதமும் தாய்லாந்தில் 20 சதவீதமும் புதிய தொற்று அதிகரித்தது. எனினும், இந்தியாவில் புதிய கொரோனா தொற்று தொடா்ந்து நிலைத்தன்மையுடன் இருந்தது. மேலும், இந்தோனேசியா, மியான்மா் ஆகிய நாடுகளில் கடந்த மாதம் தினசரி தொற்று குறைந்து வருகிறது.
இதுபோன்ற காரணங்களால், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை கடந்த வாரம் குறைந்துள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
newstm.in