நடிகை நிவேதா தாமஸுக்கு கொரோனா தொற்று உறுதி!

நடிகை நிவேதா தாமஸுக்கு கொரோனா தொற்று உறுதி!

Update: 2021-04-05 06:44 GMT

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் பாதிப்பு அசுர வேகமெடுத்து தீவிரமாக பரவி வருகிறது. இது கொரோனாவின் 2 வது அலையாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் உள்பட அனைத்து தரப்பினரும் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

நிவேதா தாமஸ், தமிழில் விஜய்யுடன் ‘ஜில்லா’, கமலுடன் ‘பாபநாசம்’, ரஜினியுடன் ‘தர்பார்’, தெலுங்கில் ‘ஜென்டில்மேன்’, ‘நின்னு கோரி’, ‘ஜெய் லவ குசா’ உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நாயகர்களுடன் நடித்துள்ளார். இந்நிலையில், நிவேதா தாமஸுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ள நிவேதா தாமஸ்


“எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவ விதிமுறைகளையும் பின்பற்றி என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். விரைவில் முழுமையாகக் குணமடைவேன் என எதிர்பார்க்கிறேன்.

அன்பும் ஆதரவும் அளித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக என்னைச் சிறப்பாகக் கவனித்துக் கொண்ட மருத்துவக் குழுவுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்கவும்”. என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News