எஸ்.வி.சேகருக்கு கொரோனா தொற்று உறுதி!!

எஸ்.வி.சேகருக்கு கொரோனா தொற்று உறுதி!!

Update: 2022-01-23 18:56 GMT

நடிகரும், முன்னாள் எம்.எல்..வுமான எஸ்.வி.சேகருக்கு  கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா மூன்றாவது அலையான ஒமைக்ரான் வைரஸ் நாடு முழுவதும் தீவிரமாகப் பரவி வருகிறது. இதில் அரசியல் பிரமுகர்கள், திரைத்துறை பிரபலங்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கமல்ஹாசன், வடிவேலு, விஷ்ணு விஷால், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, துல்கர் சல்மான், மம்மூட்டி, இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்ட பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்

இந்நிலையில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு  கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள அவர், இரண்டு டோஸ் தடுப்பூசி ஏற்கனவே போட்டு விட்டேன். சமீபத்தில் பூஸ்டர் தடுப்பூசி போட இருந்தேன்.

102 டிகிரி செல்ஷியஸ் காய்ச்சல் இருந்ததால், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்த போது, பரிசோதனையில் லேசான கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது.

பயப்படும் வகையில் இல்லை என்று மருத்துவர்கள் கூறியதால், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், உரிய பரிசோதனை செய்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

newstm.in

Similar News