வைகோவுக்கு கொரோனா தொற்று உறுதி..!

வைகோவுக்கு கொரோனா தொற்று உறுதி..!

Update: 2022-01-29 15:06 GMT

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. தொற்று பரவல் தினம் தினம் காட்டுத்தீ போல அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இருப்பினும், இந்த கொரோனா வைரசால் அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள் என முக்கிய பணியில் ஈடுபடுபவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். தொடர்ந்து, வீட்டிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

வைகோவுக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை பரிசோதனை செய்து கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Similar News