பிரபல இசையமைப்பாளருக்கு கொரோனா தொற்று!!
பிரபல இசையமைப்பாளருக்கு கொரோனா தொற்று!!
பிரபல இசையமைப்பாளர் தமனுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா மூன்றாவது அலை நாடு முழுவதும் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்ந்து வருகிறது. பிரபலங்கள் பலரும் நோய் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
சமீபத்தில், பாடகர் சோனு நிகாம், நடிகர் மகேஷ் பாபு உள்ளிட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இசையமைப்பாளர் தமனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
‘ஈரம்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான தமன் தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார். ஷங்கர் தற்போது இயக்கி வரும் ‘ராம் சரண் 15’, வம்சி பைடிப்பள்ளியின் ‘விஜய் 66’ படத்தில் தமன்தான் இசையமைக்கிறார்.
தமிழில் கடைசியாக தமன் இசையில் சிம்புவின் ‘ஈஸ்வரன்’, விஷாலின் ‘எனிமி’ வெளியானது. தற்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
newstm.in