இளம் நடிகருக்கு கொரோனா தொற்று- சமூகவலைதளத்தில் ரசிகர்கள் கவலை..!

இளம் நடிகருக்கு கொரோனா தொற்று- சமூகவலைதளத்தில் ரசிகர்கள் கவலை..!

Update: 2021-04-15 16:45 GMT

தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாரி - 2’ படத்தில் வில்லனாக நடித்த பிரபல மலையாள ஹீரோ டோவினோ தாமஸுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது அவருடைய ரசிகர்களை கவலையடைச் செய்துள்ளது.

மலையாளத்தில் வெளியான பிரவுவிண்ட மக்கள் என்ற படத்தில் அறிமுகமானவர் டோவினோ தாமஸ். கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘என்னு நிண்ட மொய்தீன்’ படம் மூலம் தமிழக ரசிகர்களிடமும் பிரபலமானார்.

அதை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து கவனமீர்த்த டோவினோ, தமிழில் மாரி - 2 படத்தில் வில்லனாக அறிமுகமானார். மேலும் பல்வேறு படங்களில் நடித்து வந்த நிலையில் தற்பொது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள டோவினோ, தனக்கு கொரோனாவுக்கான எந்த அறிகுறிகளும் இல்லாத நிலையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

அண்மையில் இவருடைய நடிப்பில் வெளியான ‘கழா’ படம் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது. விரைவில் நடிகர் டோவினோ தாமஸ் பூரண உடல்நலம் பெற்று மீண்டும் வரவேண்டும் என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
 

newstm.in

Tags:    

Similar News