மீண்டும் மிக வேகமாக பரவும் கொரோனா தொற்று.. அதிர்ச்சியில் மருத்துவத்துறை
மீண்டும் மிக வேகமாக பரவும் கொரோனா தொற்று.. அதிர்ச்சியில் மருத்துவத்துறை
இந்தியாவில் மீண்டும் ஒரே நாளில் 33,750 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் குறைந்துவந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் பரவத்தொடங்கியுள்ளது. அதுவும் மிகத் தீவிரமாக பரவுவதால் மருத்துவத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியா முழுவதும் நேற்று 27,553 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அதுவே இன்று 33,750 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 3,48,89,132 லிருந்து 3,49,882 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 10,846 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 123 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 4,81,770லிருந்து 4,81,893 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,45,582 ஆக அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு மாநில அரசுகள் அடுத்தடுத்து கட்டுப்பாடுகளை கடுமையாக்கி வருகின்றன.
இந்த நிலையில், கொரோனா ஒருபக்கம் இருக்க ஒமைக்ரானும் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 1,700 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்றில் இருந்து 639 பேர் குணமடைந்த நிலையில் 1,061 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகபட்சமாக ஒமைக்ரான் பாதிப்பு பதிவான மாநிலங்கள் விவரம்;-
மகாராஷ்டிரா- 510
டெல்லி - 351
கேரளா - 156
குஜராத் - 136
தமிழகம் -121
ராஜஸ்தான் -120
தெலுங்கானா -67
கர்நாடகா -64
அரியானா -63
ஒடிசா -37 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு பதிவாகி உள்ளது.
newstm.in