கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக 2 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்குவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மிகத்தீவிரமாக இருந்து வரும் நிலையில் அதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. இதனிடையே பல்வேறு மாநிலங்களில் மருந்து, ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. 

இதனை சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பல்வேறு தரப்பினரும் அரசுக்கு உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியமும் இந்திய அரசுக்கு உதவ முன்வந்துள்ளது. 

இது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கொரோனா வைரஸ்க்கு எதிரான போரில் மருத்துவத்துறைக்கு துணை நிற்கும் முயற்சியில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. இந்தக் கடினமான காலக்கட்டத்தில் தேசத்துடன் துணை நிற்கும் விதமாக ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இவை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களுக்கு உதவும். அதன்படி 10 லிட்டர் திறன் கொண்ட 2 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை பிசிசிஐ வழங்கும் என அவர்  தெரிவித்துள்ளார்.



newstm.in

 
 

Tags: