தமிழகம் உள்பட இந்த 6 மாநிலங்களில் தான் கொரோனா அதிகம்.. மத்திய அரசு எச்சரிக்கை !!

தமிழகம் உள்பட இந்த 6 மாநிலங்களில் தான் கொரோனா அதிகம்.. மத்திய அரசு எச்சரிக்கை !!

Update: 2022-01-21 10:00 GMT

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 3.17 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதியானது.  தமிழகத்தில் கொரோனா பரவல் 29,000-த்தை தினசரி கொரோனா பாதிப்பு நெருங்கியுள்ளது. தமிழகம் போன்று 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகளவில் இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. 

அதாவது, இந்தியாவில் தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் தான் அதிகளவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் ஆகியவை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளன. 

இந்த மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரக் குழுக்களை அனுப்பி உள்ளோம், தொடர்ந்து நிலைமையை மதிப்பாய்வு செய்து வருகிறோம். தமிழகத்தில் கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது தொற்று விகிதம் 10.70 சதவீதத்தில் இருந்து 20.50 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

சிகிச்சையில் உள்ள வழக்குகளின் அடிப்படையில் மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், குஜராத், ஒடிசா, டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் முதல் 10 இடங்களில் உள்ளன என கூறினார்.

மேலும், நாட்டில் 15-18 வயதுக்குட்பட்ட 52% குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாட்டில் இரண்டு தடுப்பூசிகளுக்கு சந்தை அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரலுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தேசிய கட்டுப்பாட்டாளரின் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. அவ்வாறு அனுமதி கிடைக்கும்பட்சத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

newstm.in

Tags:    

Similar News