ஐபிஎல் வீரர்களையும் விட்டுவைக்காத கொரோனா.. டெல்லி அணி பந்துவீச்சாளருக்கு பாதிப்பு !!

ஐபிஎல் வீரர்களையும் விட்டுவைக்காத கொரோனா.. டெல்லி அணி பந்துவீச்சாளருக்கு பாதிப்பு !!

Update: 2021-04-14 17:53 GMT

ஐபிஎல் கிரிக்கெட் தொடர்ந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு போட்டியில் விளையாடியுள்ள டெல்லி அணி அதாவது சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக தென்னாப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆன்ரிச் நார்ட்ஜே விளையாடும் வருகிறார். 

இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. இந்த சீசனில் கொரோனா தொற்றினால் பதிக்கபட்ட இரண்டாவது டெல்லி வீரரானர் அவர். இதற்கு முன்னதாக அக்சர் பட்டேலும் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் இருந்து கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி அன்று மும்பை வந்த அவர் கொரோனா கட்டுப்பாடு விதிகளினால் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டார். தற்போது அவருக்கு நோய் தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. 

எனினும் மற்ற வீரர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் ஆன்ரிச் நார்ட்ஜே தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு நலமுடன் விளையாடுவார் என அந்த அணி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
 
 
newstm.in


 

Tags:    

Similar News