மனைவிக்கு கொரோனா பாசிட்டிவ்.. அச்சத்தில் தலையை துண்டித்து கொலை செய்த கணவர் !!

மனைவிக்கு கொரோனா பாசிட்டிவ்.. அச்சத்தில் தலையை துண்டித்து கொலை செய்த கணவர் !!

Update: 2021-04-27 12:31 GMT

பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த அதுல் லால் என்பவர் ரயில்வேயில் பணியாற்றி வந்தார். அதுல் லால் அங்குள்ள முன்னாச்சக் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனது மனைவி துலிகாவுடன் வசித்து வந்தார்.  

இந்நிலையில், துலிகாவுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி போன்ற உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்று கொரோனா பறிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என முடிவு வந்தது. நேற்று முன்தினமே துலிகாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

இதனிடையே மனைவிக்கு கொரோனா வந்ததால் தனக்கும்  வந்துவிடுமோ என அதுல் லால் அச்சமடைந்து பீதியில் இருந்துள்ளார். இதனால் அவர் விபரீதமாக யோசித்து தனது கொலை கொலை செய்தமுடிவு செய்துள்ளார். மேலும், மனைவியின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தார். பின்னர், அவரும் தனது அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

அவரது தற்கொலை குறித்து அங்கு விசாரிக்க சென்றப்போது தான் மனைவி வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இந்த பலி சம்பவங்களுக்கு கொரோனா தொற்றுதான் காரணமா? அல்லது வேறு காரணங்கள் இருக்கிறதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

newstm.in

Tags:    

Similar News