கொரோனா கைதி தப்பி ஓட்டம்.. கோவையில் பரபரப்பு..!

கொரோனா கைதி தப்பி ஓட்டம்.. கோவையில் பரபரப்பு..!

Update: 2022-01-29 12:07 GMT

கோவையில், கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் நல்லாம்பாளையம், டவுன்ஹால், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் 4 சிறிய கோயில்கள் அடுத்தடுத்து சேதப்படுத்தப்பட்டது.

இதுதொடர்பாக, சேலத்தைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது, இரு பிரிவுகள் இடையே மோதலை ஏற்படுத்த முயற்சித்தல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கோவை மத்திய சிறையில் கஜேந்திரன் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 27-ம் தேதி கொரோனா தொற்று காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் கஜேந்திரன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று இரவு சிறைக் கைதிகளுக்கான வார்டில் இருந்து கஜேந்திரன் தப்பி ஓடினார். இதுகுறித்து தகவலறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார், வழக்குப்பதிவு செய்து நகரின் பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

கொரோனா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதி தப்பி ஓடிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News