கொரோனா இரண்டாம் அலை எதிரொலி! சூர்யா 40 படக்குழு எடுத்த திடீர் முடிவு..!

கொரோனா இரண்டாம் அலை எதிரொலி! சூர்யா 40 படக்குழு எடுத்த திடீர் முடிவு..!

Update: 2021-04-27 18:20 GMT

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 40 படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அவருடைய 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை மிகுந்த பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா மோகன் நடிப்பதை அடுத்து, மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் திவ்யா துரைசாமி நடிக்கிறார்.

இவர்கள் தவிர சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். படத்திற்கான இசையமைப்பு பணிகளை டி. இமான் மேற்கொண்டு வருகிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படக்குழுவினர் முக்கிய முடிவு எடுத்துள்ளனர்.

அதன்படி சுமார் 100 பேர் பங்கேற்கும் விதத்திலான ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட இருந்தது. ஆனால் தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், அந்த குறிப்பிட காட்சியை படமாக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பாண்டிராஜ் முடிவு செய்துள்ளார்.

அதன்படி கொரோனா பரவல் முடிவுக்கு வந்த பின்பு, குறிப்பிட்ட சண்டைக் காட்சியை பாண்டிராஜ் படமாக்கவுள்ளார். சூர்யா 40 படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, தென்காட்சி போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டு, தற்போது சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது. 

Tags:    

Similar News