இந்தியாவில் கொரோனா மாத்திரை விற்பனைக்கு வந்தது: விலை 35 ரூபாய் !!

இந்தியாவில் கொரோனா மாத்திரை விற்பனைக்கு வந்தது: விலை 35 ரூபாய் !!

Update: 2022-01-04 18:33 GMT

கொரோனா தொற்றால் தீவிர பாதிப்புக்கு உள்ளாவோருக்கு சிகிச்சை அளிக்க அமெரிக்காவை சேர்ந்த மெர்க் என்ற மரு இந்து நிறுவனம் மோல்னுபிராவிர் என்ற மாத்திரையை தயாரித்துள்ளது. இந்த மாத்திரையை அவசர கால பயன்பாட்டுக்குந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு சமீபத்தில் அனுமதி அளித்தது.

இந்தியாவில் இந்த மாத்திரைகளை ஆப்டிமஸ் ஃபார்மா, டாக்டர் ரெட்டீஸ், சிப்லா, சன் ஃபார்மா உள்ளிட்ட 13 நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா சிகிச்சைக்காக மோல்னுபிராவிர் (மோல்ஃப்ளூ) என்ற மாத்திரையை அறிமுகம் செய்யவுள்ளதாக டாக்டர் ரெட்டி ஆய்வகங்கள் கடந்த வாரம் அறிவித்தன. தீவிர கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த மாத்திரைகளை பயன்படுத்தலாம் என கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த மாத்திரையின் விலை 35 ரூபாய் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரெட்டி ஆய்வகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது. மோல்ஃப்ளூ மாத்திரைகள் அடுத்த வாரம் முதல் மருந்து கடைகளில் கிடைக்கும். அதிகம் கொரோனா பாதிப்புகள் உள்ள மாநிலங்களுக்கு இந்த மாத்திரைகளை ஏற்றுமதி செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு மாத்திரையின் விலை 35 ரூபாய் ஆகும். 5 நாட்கள் சிகிச்சைக்கு மொத்தம் 40 மாத்திரைகள் தேவைப்படும். 40 மாத்திரைகளின் விலை 1,400 ரூபாய் ஆகும். இரண்டு தடுப்பூசிகளை செலுத்தியவர்கள் இந்த மாத்திரைகளை பயன்படுத்தலாம், இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

newstm.in

Tags:    

Similar News