கொரோனா அச்சுறுத்தல்.. திருப்பதி ஆன்லைன் தரிசன டிக்கெட் காலகெடு 90 நாள் வரை நீட்டிப்பு !!
கொரோனா அச்சுறுத்தல்.. திருப்பதி ஆன்லைன் தரிசன டிக்கெட் காலகெடு 90 நாள் வரை நீட்டிப்பு !!
இந்தியாவில் கொரோனாவின் 2ஆவது அலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். விதிவிலக்கே இல்லாமல் வைரஸ் அனைவரையும் பாதிக்கிறது. இதனால் தொழில்நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தளங்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அந்த வகையில், திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்காக ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொண்ட பக்தா்களுக்கு 90 நாள்கள் வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் இலவச தரிசனத்தை முற்றிலும் ரத்து செய்தது. ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொண்ட பக்தா்கள் மட்டும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தரிசனம் செய்து வருகின்றனா்.
இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், தரிசனத்திற்கு வர முடியாமல் பக்தா்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனா்.
எனவே, ஏப்ரல் 21ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தா்கள் கொரோனா தொற்று காரணமாக வரமுடியாத சூழ்நிலை ஏற்படும் நிலையில், அவா்கள் 90 நாள்களுக்குள் வந்து ஏழுமலையானை தரிசனம் செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
மேலும் காய்ச்சல், சளி, இருமல். உடல் வலி உள்ளவா்கள் திருமலைக்கு வரவேண்டாம் என்றும் தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது. அதேநேரத்தில் அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
newstm.in