14 நாள் எப்படி தனிமையில் இருப்பது -  நடிகை சுஹாசினி வைரல் VIDEO

14 நாள் எப்படி தனிமையில் இருப்பது -  நடிகை சுஹாசினி வைரல் VIDEO

Update: 2020-03-22 16:47 GMT

லண்டனில் இருந்து வந்த தனது மகன் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக நடிகை சுஹாசினி விழிப்புணர்வு வீடியோ ஒன்றை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையா‌க நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என பி‌ரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனிடையே இயக்குநர் மணிரத்னத்தின் மனைவி சுஹாசினி மணிரத்னம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது மகன் நந்தன் லண்டனில் இருந்து வந்துள்ளதாகவும் அதனால் அவரை வீட்டில் தனிமைப்படுத்தி வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். ஆனால் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்றும் சுஹாசினி தெளிவுபடுத்தி இருக்கிறார். 


மேலும் அந்த வீடியோவில் அவர் விழிப்புணர்வு சார்ந்த சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர், "கண்ணாடிக்கு வெளியில் பத்து அடி தூரத்தில் தள்ளி நின்று தன்னுடைய மகனிடம் பேசிக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். நந்தன் லண்டனில் இருந்து கடந்த 18 ஆம் தேதி சென்னைக்கு வந்தார் என்றும், வந்ததில் இருந்து அவர் கண்ணாடி அறைக்குள் தான் இருக்கிறார் என சுஹாசினி கூறியுள்ளார். 

Tags:    

Similar News