இயக்குனர் ராஜமவுலியின் தந்தைக்கு கொரோனா!
இயக்குனர் ராஜமவுலியின் தந்தைக்கு கொரோனா!
பாகுபலி படத்தின் இயக்குநர் ராஜமவுலியின் தந்தையும், இயக்குநருமான விஜயேந்திர பிரசாத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாகுபலி, மெர்சல், தலைவி என பல படங்களுக்கு இயக்குநர் ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதியிருக்கிறார். தெலுங்கில் அர்த்தங்கி, ஸ்ரீ கிரிஷ்ணா, ராஜன்னா, ஸ்ரீ வள்ளி ஆகிய படங்களை இயக்கியவர் விஜயேந்திர பிரசாத்.
இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தயாராகி வரும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி படத்துக்கு தற்போது திரைக்கதை எழுதியுள்ளார்.
கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியான மணிகர்ணிகா, மகதீரா, பாகுபலி என இவரது திரைக்கதையில் வெளியான படங்கள் அனைத்துமே மெக ஹிட்டடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தன.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, இயக்குநர் விஜயேந்திர பிரசாத், தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்து கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.