குறையும் கொரோனா.. ஆகஸ்ட் 1 முதல் பள்ளிகள் திறப்பு.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தது அரசு !

குறையும் கொரோனா.. ஆகஸ்ட் 1 முதல் பள்ளிகள் திறப்பு.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தது அரசு !

Update: 2021-07-27 19:55 GMT

ஓராண்டுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் கொரோனா குறைந்து வருவதால் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என உத்தரகாண்ட் மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடங்கியது முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. தற்போது கொரோனா 2ஆவது குறைந்து வருவதால் அடுத்தடுத்து ஒவ்வொரு மாநிலமாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. முதல் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து ஒருசில மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை திறக்கப்பட்டன. எனினும் இரண்டாவது அலை பரவத் தொடங்கியதால் சில நாட்களிலேயே மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன.

தற்போது இந்தியாவில்  தொற்று பரவல் குறைந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில்  கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்  உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பள்ளிகளில் திறக்கப்பட்டாலும் வருகைப் பதிவு எனப்படும் அட்டண்டென்ஸ் கட்டாயம் அல்ல என்று கூறப்பட்டுள்ளது. எனினும், முகக்கவசம் அணிவது சமூக இடைவெளியை பின்பற்றுவது ஆகியவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 
newstm.in

Tags:    

Similar News