கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸிக்கு கொரோனா!!

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸிக்கு கொரோனா!!

Update: 2022-01-03 07:00 GMT

சர்வேதச கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு கொரோனா பாதிப்பு உறுத செய்யப்பட்டுள்ளது.

அர்ஜன்டினா கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி கடந்த ஆண்டு பார்சிலோனா அணியிலிருந்து விலகினார். பார்சிலோனா கால்பந்தாட்ட கிளப் அணியில் இருந்து அவர் கண்ணீர் மல்க விடைபெற்றார்.

ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் 21 ஆண்டுகளுக்கு பிறகு அவர் அந்த அணியிலிருந்து வெளியேறினார். இதனையடுத்து பிரான்ஸின் செயின்ட் ஜெர்மெய்ன் கிளப்பில் இணைந்தார்.

வேன்ஸ் அணிக்கு எதிராக பிரெஞ்சு கோப்பைப் போட்டியில் அவர் கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.இதனால் இன்று நடைபெறவுள்ள டை மேட்ச்சில் அவர் கலந்து கொள்ள மாட்டார்.

மெஸ்ஸியுடன் ஜூவான் பெர்னாட், கோல் கீப்பர் செர்ஜியோ ரிக்கோ, மிட் ஃபீல்டர் நாதன் பிடுமஸாலா ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் தற்போது நாள் ஒன்றுக்கு 2 லட்சம் பேர் வரையில் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.

newstm.in

Similar News