முன்னாள் அமைச்சருக்கு கொரோனா !!

முன்னாள் அமைச்சருக்கு கொரோனா !!

Update: 2021-04-17 21:41 GMT

நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தொடக்கத்தில் மிகக்குறைவாக இருந்த பரவல் வேகம் தற்போது அதிகரித்துகொண்டே செல்கிறது மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நோய் பரவலை தடுக்க மத்திய,மாநில அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் பல்வேறு தரப்பினரும் கடும் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் என வைரஸ் தொற்று யாரையும் விட்டு வைக்கவில்லை.அந்த வகையில் திண்டுக்கல் நத்தம் விஸ்வநாதன் மற்றும் அவரது மனைவி செல்வராணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதியானதால் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

Tags:    

Similar News