புரட்டி போடும் கொரோனா... உச்சநீதிமன்ற பணியாளர்கள் 50% பேருக்கு கொரோனா !

புரட்டி போடும் கொரோனா... உச்சநீதிமன்ற பணியாளர்கள் 50% பேருக்கு கொரோனா !

Update: 2021-04-12 10:22 GMT

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவ தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் பகுதி நேர, இரவு நேர ஊரடங்குகளை அறிவித்து வருகின்றன.

மக்கள் மட்டுமல்லாமல் வெவ்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்களும் கொரோனாவால் பாதித்து வருகின்றனர். 

அந்த வகையில் டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தின் பணியாளர்கள் 50% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் வழக்கமான பணிகளோடு நீதிமன்றம் முழு வீச்சில் செயல்பட்டு வந்தது.


இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பணிபுரிபவர்களில் 50% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர. இதனால் இனி நீதிமன்ற வழக்குகளை நீதிபதிகள் வீட்டில் இருந்தபடியே காணொலி காட்சி வழியாக விசாரிப்பார்கள் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

newstm.in

Tags:    

Similar News