இனி வாட்ஸ்அப்பில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கிடைக்கும்... பெறுவது எப்படி?

இனி வாட்ஸ்அப்பில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கிடைக்கும்... பெறுவது எப்படி?

Update: 2021-08-08 19:47 GMT

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழை வாட்ஸ்அப்பில் இனி நொடிகளில் பெறலாம் என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. 

கொரோனா 3ஆவது அலையை தடுக்க நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு உடனடியாக அட்டை வழங்கப்படுகிறது. செல்போனில் குறுஞ்செய்தியாக செல்கிறது. எனினும் சிலர் சான்றிதழ் கிடைப்பது இல்லை என கூறுகின்றனர்.

இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழை வாட்ஸ்அப்பில் இனி பெறலாம் என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், 90131 51515 வாட்ஸ்அப் எண்ணில் covid certificate என அனுப்ப வேண்டும். சம்பந்தப்பட்ட நபர் ஒடிபி எண்ணை பதிவு செய்தவுடன் தடுப்பூசி சான்றிதழை நொடிகளில் பெறலாம் என அவர் கூறியுள்ளார். 

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 50.68 கோடியைக் கடந்து குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்துள்ளது. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 58,51,292 முகாம்களில் 50,68,10,492 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 55,91,657 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.


newstm.in

Tags:    

Similar News