பாஜக ஆட்சி அமைந்தால் தடுப்பூசி இலவசம்! மம்தாவுக்கு போட்டியாக அறிவிப்பு !!
பாஜக ஆட்சி அமைந்தால் தடுப்பூசி இலவசம்! மம்தாவுக்கு போட்டியாக அறிவிப்பு !!
மேற்கு வங்கத்தில் 8 கட்டத் தோ்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. தற்போது மேற்குவங்கத்தில் மும்முறை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு அரசியல் தலைவர்கள் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் கட்டுப்பா விதித்துள்ளது.
ஆளும் மம்தா கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. முதலமைச்சர் மம்தா பானர்ஜி பாஜக மீதும் மத்திய அரசு மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமர்த்தி வருகிறார். ‘பிஎம் கோ்ஸ்’ என்ற பெயரில் மத்திய அரசு பெருமளவில் நிதியைத் திரட்டி வைத்துள்ளது. ஆனால், நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்க மறுத்து வருகிறது என மம்தா குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், மாநில அரசுகள் தன்னிச்சையாக கொரோனா தடுப்பூசி நடவடிக்கையில் செயல்பட அனுமதிக்காமல், தங்கள் மூலமாகவே கொரோனா தடுப்பூசி மாநிலங்களைச் சென்றடைய வேண்டும் என்பதில் குறியாக உள்ளது. இதனால், தடுப்பூசி விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி பாதிக்கப்படுகிறது எனவும் கூறினார்.
மே 5ஆம் தேதிக்குப் பிறகு எனது தலைமையிலான மேற்கு வங்க அரசு அமைந்ததும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசியை அளிக்கப்படும் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் பாஜகவும் இதே அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அம்மாநிலத்தின் பாஜக ட்விட்டர் பக்கத்தில், மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்ததும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
As soon as BJP government comes to power in West Bengal, COVID-19 vaccine will be provided free of cost to everyone. pic.twitter.com/gzxCOUMjpr
— BJP Bengal (@BJP4Bengal) April 23, 2021
newstm.in