கொரோனா தடுப்பூசி பக்க விளைவு... இந்தியாவில் ஏற்பட்ட முதல் மரணம்..!

கொரோனா தடுப்பூசி பக்க விளைவு... இந்தியாவில் ஏற்பட்ட முதல் மரணம்..!

Update: 2021-06-16 05:35 GMT

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை தீவரமாக பரவி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என கருதப்படும் நிலையில், கடந்த ஜனவரி முதல் அடுத்தடுத்தக் கட்டமாக வயது வாரியாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

ஜனவரி முதல் இன்று (ஜூன் 15) வரை 151-வது நாளாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இன்று காலை 10 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக 45 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களில் 40 சதவீதம் பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 30.7 சதவீதம் பேருக்கும், 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டோர்களில் 9.3 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி பக்க விளைவுகள் குறித்து ஆய்வு செய்து வரும் அரசு குழு (ஏஇஎப்ஐ) தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் அனாபிலாக்ஸிஸ் காரணமாக முதல் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு ஏற்படும் பாதகமான நிகழ்வுகள் குறித்து இந்த குழுவினால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது போன்ற 31 பக்கவிளைவு கொண்டவர்களை ஆய்வுக்கு எடுத்து கொண்டது

இந்த குழுவின் மார்ச் 8, 2021-ல் தடுப்பூசி போடப்பட்ட பின்னர் 68 வயதான ஒருவர் அனாபிலாக்ஸிஸ் (கடுமையான ஒவ்வாமை எதிர்வினை) காரணமாக இறந்துள்ளார் என்பதை உறுதிபடுத்தி உள்ளது.

Tags:    

Similar News